Sunday, 21 December 2014

பெண்களை மகிழ்ச்சிப்படுத்தும் தாம்பத்ய உறவு..!

By on 21:37
செக்ஸ் பற்றி பேசாத ஊடகங்களே இல்லை. நாளிதழ்களில் டல்லடித்தால் செக்ஸ் பற்றி ஆய்வு வெளியிடுவதும், டி.ஆர்.பி ரேட்டிங்கிற்காக பிரபல மருத்துவர்களை வைத்து தாம்பத்ய உறவுமுறை குறித்த கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்துவதும் வாடிக்கைதான். செக்ஸ் பற்றி பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. சுவாரஸ்யமான சில ஆய்வு முடிவுகள் உங்களுக்காக.

முடிவில்லா மகிழ்ச்சி

செக்ஸ் என்பது ஒரு வகையான பசி! வயிற்றுக்கும் பசிக்கும் போது தீனி போடுவதைப் போல உடலுக்கு பசிக்கும் போது அதற்கும் தீனி போடவேண்டியது அவசியம் என்று பிரபல மருத்துவர்கள் கூறியுள்ளனர். எனவேதான் இறக்கும் வரை வயிற்றுப் பசிக்கு எவ்வாறு உணவு கொடுக்கிறோமோ அதேபோல் உடல் பசியை ஆரோக்கியமாக தீர்க்க வேண்டியது அவசியம் என்கிறது ஒரு ஆய்வு


நடைபெற்ற ஆய்வு ஒன்றில் இளம் வயதினரை விட 75 முதல் 85 வயதானவர்கள்தான் மாதத்துக்கு இரு முறை உடலுறவு வைத்துக்கொள்கிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.

பெண்களை மகிழ்விக்கும் செக்ஸ்

தாம்பத்ய உறவில் திருப்தியாக இருக்கும் பெண்கள், வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்களாம். அதிகமாக தாம்பத்ய உறவில் ஈடுபடுபவதால் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா அல்லது மகிழ்ச்சியாக இருப்பதால் அதிகம் தாம்பத்ய உறவில் ஈடுபடுகிறார்களா என்பது தெரியவில்லை என்கிறார் ஆஸ்திரேலிய நாட்டு, மொனாஷ் பல்கலைக்கழக ஆய்வாளர் சூசான் டேவிஸ்! இதைத்தவிர ஒரு பெண்ணின் திருப்தியில்லாத செக்ஸ் வாழ்க்கை, அப்பெண்ணின் பொதுவாழ்க்கை உறவுகளையும், தன்னம்பிக்கையையும் வெகுவாக பாதிக்கிறது என்கிறார் டேவிஸ்!

வாசனையால் கவரும் தன்மை


செக்ஸ் உணர்வால் தூண்டப்பட்ட ஒரு ஆணின் வியர்வையானது வித்தியாசமான வாசனையைக் கொண்டதாம்! சாதாரண வியர்வைக்கும், செக்ஸ் வியர்வைக்குமான வித்தியாசத்தை ஒரு பெண்ணால இனம் காண முடியும் என்கிறது நரம்பியல் தொடர்பான மருத்துவ மாத இதழின் வெளியான ஒரு ஆய்வறிக்கை!

ஆண்களுக்கு ஆயுள் அதிகம்

தாம்பத்ய உறவில் அதிக ஈடுபாடு ஆண்களை விட பெண்களுக்கே அதிகம் இருக்கிறதாம்.

55 வயதில் உள்ள ஒரு ஆணையும் பெண்ணையும் எடுத்துக்கொண்டால், தாம்பத்ய உறவில் ஈடுபாடு ஆண்களுக்கு மேலும் 15 வருடங்களுக்கு இருக்கிறதாம்! ஆனால் பெண்களுக்கோ 10 வருடங்கள்தானாம்! அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் இது தெரியவந்துள்ளது.

குற்ற உணர்ச்சி

செக்ஸ்துரோகம் என்பது அடிப்படையில் இரு பாலினத்தவருக்கும் பொதுவானது என்கிறார் கனடா நாட்டு ஆய்வாளர் மேரியான் ஃபிஷ்ஷர்!

செக்ஸ் தொடர்பான குற்ற உணர்வுகளைப் பொறுத்தவரை, ஆண்களின் குற்ற உணர்ச்சியானது தன் பெண் துணைக்கு செய்யும் செக்ஸ் துரோகத்தினாலும்/ஏமாற்றுதல், பெண்களின் குற்ற உணர்ச்சி ஒரு சமுதாய கட்டமைப்பின் செக்ஸ் குறித்த விதிகளை மீறுவதாலும் ஏற்படுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது!

சரியான வாழ்க்கைத்துணை

தனக்கு சரியான வாழ்க்கைத் துணையை, தன் இயற்கை உணர்வுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கும்வரை ஒரு பெண் பொறுத்திருக்கிறாள். ஆனால், ஒரு ஆண் பொறுத்திருப்பது தான் போட்டிக்கு/சவாலுக்குத் தயார் என்பதைக் காட்ட என்கிறது ஒரு ஆய்வு!

புற்றுநோய் பாதிப்பு

தங்களின் 20, 30 வயதுகளில் தாம்பத்ய உறவில் மிகுந்த ஆர்வமும், அதிக சுய இன்பமும் காணும் ஆண்களுக்கு ப்ராஸ்டேட் சுரப்பி புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம் என்கிறது நாட்டிங்கேம் பல்கலைக்கழக ஆய்வு! ஆனால், அதே வாய்ப்பானது, வயதாக ஆக குறைகிறதாம். அதைவிட முக்கியமாக, ஒருவரின் 50 வயதிலும் அதற்கும் பின்னுமான தாம்பத்ய உறவு செயல்பாடுகள் சிறிதளவேனும், அது ப்ராஸ்டேட் சுரப்பி புற்று நோயிலிருந்து ஒரு மனிதனை காக்கிறதாம்!

உச்சக்கட்ட புள்ளி

“ஜி-ஸ்பாட் அல்லது செக்ஸின் உச்சகட்ட இன்பப் புள்ளி என்பது ஒன்று இருக்கிறாதா என்பது பெரும்பாலோனோர் கேட்கும் கேள்வி. ஆனால் அந்த புள்ளி ஒரு கற்பனையான ஒன்னு, அப்படியே இருந்தாலும் அது தனிமனித சம்பந்தப்பட்டது என்கின்றனர் விஞ்ஞானிகள்!

ஆன்மீகத்தோடு தொடர்புடையது

ஆன்மீகமானது, இளம்வயதினரின் செக்ஸ் வாழ்க்கையை மதம், தூண்டுதல் மற்றும் மதுவை விட பெரிதும் பாதிக்கிறது என்கிறது ஆய்வு! ஆன்மீகத்தின்பால் ஆர்வமுடைமையானது இருவருக்கிடையில் உள்ள நெருக்கத்தை அதிகரித்து ஆரோக்கியமான செக்ஸ் வாழ்க்கைக்கு அடிப்படையாகிறது என்கிறது ஆய்வு!

1 comments:

  1. It is easy to take off clothes & have sex. But to open your Soul to someone, letting them know your thoughts, dreams, fears, hopes, spirit....That's being Real Naked.
    Looking fwd to get real naked with someone.... interested girls from tamilnadu can contact me at my whatsapp number :+917639578730*

    ReplyDelete